தேர்தல் பரப்புரைக்காக வரும் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாடு வர (pmtn) உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்வரும் மக்கள் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தங்களது தேர்தல் பரப்புரைகளை தீவிரபடுத்தி உள்ளனர்.
இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களது கட்சியில் இருக்கும் திரை பிரபலங்கள் ,பிரபல அரசியல் தலைவர்கள் என அனைவரும் மக்களிடம் நேரடியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வரும் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார் .
சேலத்துக்கு வரும் பிரதமர், அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதன்பின் மார்ச் 16-ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுகூட்டத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மக்களவை தொகுதிகளுக்கு பரப்புரை மேற்கொள்கிறார்.
இதற்கடுத்த நாள் கோவையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து (pmtn) கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் தேர்தலின் முடிவில் எந்த கட்சி வெற்றிபெற போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.