கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங் மெசின், உட்பட பல பரிசுகளை கரூர் மாவட்ட அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி போடுவதற்கு பிறரை அழைத்துவரும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் எதிர்வரும் 10ஆம் தேதியன்று, மெகா தடுப்பூசி முகாம் நடைபெறூகிறது. இந்த நிலையில், தடுப்பூசி முகாமிற்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வாஷிங் மெசின், கிரைண்டர், மிக்ஸி, குக்கர், பாத்திரங்கள் போன்றவைகளை பரிசளிக்கப்போவதாக கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.