சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
Also Read : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனின் மகனும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் கைது..!!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து இரு அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு செப்டம்பர் 9 ஆம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.