புதுச்சேரியில் திமுக நிர்வாகியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்த நிலையில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில்,புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அகரம் கிராமத்தில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/10/image-181.png?resize=675%2C379&ssl=1)
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையைச் சேர்ந்த 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மருத்துவ கல்லூரி நிர்வாகக் கட்டிடம், மருத்துவமனை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் மருத்துவமனை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லக்கூடிய நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/10/image-182.png?resize=1024%2C580&ssl=1)
தொடர்ந்து காலை 6 மணி ஷிப்டுக்கு வந்த செவிலியர்கள் ஊழியர்கள் யாரையும் வெளியில் அனுப்பவில்லை.மருத்துவமனை ஊழியர்கள், பயிற்சி மருத்துவர்கள் என 500க்கும் மேற்பட்டவர்களை உள்ளே அனுமதிக்க வில்லை என கூறப்படுகிறது.
வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதால் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.