இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பெரும் பலமாக பார்க்கப்படுபவர் தான் சாடேஷ்வர் பூஜாரா. முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிடுக்கு அடுத்த படியாக துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்குபவர் இவர். இவரது தடுப்பு ஆட்டம் மற்றும் பந்துகளை எதிர்கொள்ளும் திறன் மிக நேர்த்தியாகயும், எதிரணிக்கு மிக சவாலானதாக இருக்கும். இதனால் இவரது விக்கெட்டை வீழ்த்த எதிரணி பந்து வீச்சாளர்கள் மிகவும் சிரமம் அடைவார்கள்.
மேலும் இவரது ஆட்டம் நீடிக்குமானால் இந்திய அணி அந்த ஆட்டதில் வலுவான நிலையை எட்டக்கூடும். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்த வரை எவ்வளவு நேரம் கலத்தில் நின்று விளையாடுகிறோம் என்பதுதான் மிக முக்கியமான ஒன்று. இதில் டிராவிடுக்கு அடுத்து பூஜாரா தான் வல்லவர் என்று சொல்லவேண்டும். இதனால் இந்தியாவின் தடுப்பு சுவர் என்று இவரை கிரிக்கெட் ரசிகர்கள் அழைப்பார்கள்.
சமீபத்தில் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வரும் ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் பூஜாரா சம்பவம் செய்துள்ளார். இந்த போட்டியில் சஸ்ஸெக்ஸ் அணிக்காக பூஜாரா விளையாடுகிறார், சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் தனது அதிரடியை வெளிக்காட்டினார். போட்டியின் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பூஜாரா இங்கலாந்து பந்து வீச்சாளர்கள் பந்துகளை நாலாபுறமும் சிதரடித்தர்.
தொடரந்து ஆடிய பூஜாரா 131 பந்துகளில் 174 ரன்கள் குவித்தார் இதுவே இவர் லிஸ்ட் A கிரிக்கெட்டில் குவித்த அதிகபட்ச ரன்ஆகும். பூஜாராவின் அதிரடியால் அந்த அணி 378 ரன்கள் குவித்து, 216 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றிபெற்றது. இதற்கு முன்பு நடந்த போட்டியிலும் 74 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் தொடரந்து இரு சதங்களை அடித்துள்ளார் இதன் மூலம் இந்த தொடரின் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரராக பூஜாரா உள்ளார். முன்பு நடந்த ஆட்டதில் ஒரே ஓவெரில் 22 ரன்கள் விளாசினார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில் 53 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்தார். ஆனால் இப்போது மாறாக 6 பந்துகளில் 22 ரன்களை விளாசியுள்ளார்.. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஆச்சியரத்தை ஏற்படுத்தியுள்ளது.