இந்தியாவில் சொந்தமாக விவசாயி ஒருவர் ரயில் வைத்திருக்கும் சுவாரசிய தகவல் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள ரயில்வே துறை, அரசாங்க சொத்து. ஆனால், அரசாங்க சொத்தான ஒரு ரயிலுக்கு ஒருவர் சொந்தக்காரராக இருக்கிறார். அது எப்படி திமிங்கலம்…!
லூதியானாவைச் சேர்ந்த சம்புரான் சிங் என்ற விவசாயி தான் ஒரு ரயிலின் சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே இந்தியர். ரயில்வே துறையின் பெரிய தவறால் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்நிலையில், வீட்டில் இருந்து கொண்டே அந்த ரயிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்கிறார் சம்புரான் சிங்.
லூதியானாவின் கட்டான கிராமத்தில் வசித்து வருகிறார் சம்புரன் சிங். முன்னதாக கடந்த 2007ஆம் ஆண்டு லூதியானா-சண்டிகர் ரயில் பாதை அமைக்கும் போது விவசாயிகளின் நிலத்தை ரயில்வே துறை கையகப்படுத்தியது. அப்போது ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் என்ற மதிப்பில் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அந்த விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் ஏக்கர் 71 லட்சம் ரூபாய் விலை போகும் பெரிய நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், தனது நிலத்திற்கு குறைவான மதிப்பில் பணம் கொடுத்ததாக கூறி சம்பூரன் சிங், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய முதல் உத்தரவில், இழப்பீட்டுத் தொகை 25 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்தப்பட்டது, அதன் பின்னர் 50 லட்சத்தில் இருந்து 1.47 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த வழக்கில் முதல் மனு 2012ல் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை முடிவில் 2015ஆம் ஆண்டுக்குள் வடக்கு ரயில்வே விவசாயிக்கு இழப்பீடு பணம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இழப்பீடு தொகையாக ரயில்வே வழங்கியது ரூ.42 லட்சம், மீதம் ரூ.1.05 கோடி தொகை விவசாயிக்கு வழங்கப்படவில்லை. ஏனெனில் இவ்வளவு பெரிய தொகையை ரயில்வே துறையால் செலுத்த முடியவில்லை.
இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஜஸ்பால் வர்மா, லூதியானா நிலையத்திற்கு வரும் ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகமும் ஜப்தி செய்ய உத்தரவிட்டார். எனவே, அந்த ரயில் சிறைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தான் சம்பூரன் சிங் அந்த ரயிலின் உரிமையாளராகினார்.
இதனால், இந்தியாவில் ரயிலின் உரிமையாளராக இருக்கும் ஒரே நபர் என்ற பெருமையை பெற்றார் சம்பூரன் சிங். ஆனாலும், இந்த சம்பவத்தின் போது நீதிமன்ற அதிகாரி மூலம் 5 நிமிடத்தில் சிறை பிடிக்கப்பட்ட ரயிலை ரயில்வே அதிகாரிகள் விடுவித்தார்கள். ஆனாலும், இந்த வழக்கு இன்றளவும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.