இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற புனித நகரமான பூரி ஜெகநாதர் கோவில் ஒடிசாவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் இன்று வெகு விமர்சையாக ரத யாத்திரை கொண்டாடபட்டு வருகிறது.இக்கோவிலின் புகழ்பெற்ற ஜகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகிய ரதங்களும் வேதமந்திர முழங்க பக்தர்கள் முன்னிலையில் சிங்க துவாராவின் முன் நிறுத்தப்பட்டது.
இந்த சடங்குகளுக்குப் பிறகு யாத்திரை தொடங்குகிறது. விழாவையொட்டி, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஒடிசா காவல்துறை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ரத யாத்திரையை முன்னிட்டு குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவர், ரத யாத்திரையின் புனிதமான நாளில் நமது நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஒடிசாவின் ரத யாத்திரை, பகவான் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் பகவான் ஜகந்நாதரின் வருடாந்திர பயணத்தை சித்தரிக்கிறது. இறைவனின் கருணை மற்றும் தெய்வீகத்தனமையைக் கொண்டாடும் வகையில் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுசேர்ந்ததைக் காட்டுகிறது.
ரத யாத்திரையில் சேரும் பக்தர்கள் ஜகந்தாதரின் தேர் இழுப்பதை தங்களின் பாக்கியமாக கருதுகின்றனர் ரத யாத்திரையுடன் தொடர்புடைய புனிதமான மற்றும் உன்னத லட்சியங்கள் நம் வாழ்க்கையை அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வளப்படுத்தட்டும் என அவர் கூறினார். இதனை தொடர்ந்து இந்த யாத்திரையில் 125 மணல் ரதங்களை மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.