தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஜனவரி 13, 14ல் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.