ரஜினிகாந்த் பிறந்தநாள்: பாட்ஷா” பட பாணியில் வந்த ரசிகர்.. – களைகட்டிய போயஸ் கார்டன்..!

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு ரசிகர்கள் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“அபூர்வ ராகங்கள்” தொடங்கி “அண்ணாத்த” வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சூப்பர் ஸ்டாருக்கு பல்வேறு திரைபிரலங்கள் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு நள்ளிரவு 12 மணிக்கு ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி மம்மூட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு டுவிட்டரில் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் படத்தை நெஞ்சில் வரைந்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கூறியுள்ளார்.

இந்நிலையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள் பூசணிக்காய் சுற்றியும், தேங்காய் உடைத்தும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ரஜினிகாந்த்தின் புகைப்படங்கள் அடங்கிய பெட்டியுடன் அவரது இல்லத்திற்கு பாட்ஷா பட பாணியில் ரசிகர் வந்துள்ளார். ரஜினிக்கு சாக்லேட் பொக்கே வழங்குவதற்கு அவர் இல்லத்துக்கு திருவள்ளூர் மாவட்ட ரசிகர்கள் குவிந்துள்ளனர். போயஸ்கார்டன் முழுவதும் ரஜினி ரசிகர்கள் தலைகளாகவே காட்சி அளிக்கிறது.


Spread the love
Related Posts