ayodhya : ஜனவரி 17ஆம் தேதி ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடக்க இருந்த அயோத்தி ராமர் சிலையின் ஊர்வலத்தை ரத்து செய்துள்ளது.
ஜனவரி 22ஆம் தேதி நடக்க இருக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக ராமர் சிலையை அயோத்தி மக்களுக்கு காட்டும் நோக்கத்தோடு இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்பட்டிருந்தது.
இந்நிலையில், அயோத்தி முழுவதும் நடக்க இருந்த ஊர்வலம் ஜனவரி 17 ராம ஜென்மபூமி வளாகத்திற்குள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அயோத்தி நகரம் முழுவதும் ராமர் சிலையை எடுத்து சென்றால் தரிசனம் செய்ய பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகம் கூடுவார்கள்.
கூட்ட நெரிசல்கள் அதிகம் ஏற்படும்.அதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாக
ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Also Read : https://itamiltv.com/tamilnadu-vijayakanth-statue-placed-in-dharmapuri/
அயோத்தி ராமர் கோவில் தற்போதைய நிலை 2024:
2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியது.
அதன் பிறகு 5 ஆகஸ்ட் 2020 அன்று அடிக்கல் நாட்டும் மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டது மற்றும் அதன் மீது ஜெய் ஸ்ரீ ராம் செதுக்கப்பட்ட செங்கற்களால் கட்டுமானம் தொடங்கப்பட்டது.
Also Read : https://x.com/ITamilTVNews/status/1744619426081882131?s=20
ஏறக்குறைய 3 ஆண்டுகள் முடிந்து, ஸ்ரீ ராம் மந்திர் அயோத்தியின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன, தற்போது வரை 1 ஆம் கட்டம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில் தற்போதைய நிலை 2024 இன் படி , ராமர் கோயிலின் 1வது கட்டம் நிறைவடைந்து, ஜனவரி 2024க்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடையும்.
ராமர் கோவில் கட்டுமான செலவு 18,000 கோடி ஆகும்.
கட்டுமானம் முடிந்ததும், மந்திர் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்படும் மற்றும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை யொட்டி கிட்டத்தட்ட 7000 அரசு தலைவர்களுக்கும் ,
3000 சிறப்பு விருந்தினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.