ரேஷன் அட்டைதாரர்கள் வீட்டில் இருந்து பை கொண்டு வந்து பொங்கல் சிறப்பு தொகுப்பை பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்;
‘கொரோனா கட்டுப்பாடுகளால் பொங்கல் தொகுப்பு வழங்கும் பைகள் தைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பைகள் இன்றி பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பின்னர் பைகளை பெற்றுக் கொள்ளலாம்.பைகள் இன்றி தொகுப்பு வாங்கும் பயனாளிகளுக்கு தனியே டோக்கன் வழங்கப்படும்.புதிய நெறிமுறைகளை பின்பற்றி பொங்கல் பரிசு தொகுப்புகளை விரைந்து வழங்க பொது வினியோக திட்ட அலுவலர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது,’என்று குறிப்பிட்டுள்ளது.