தென்காசி , தூத்துக்குடி , திருநெல்வேலி , கன்னியாகுமாரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் இலங்கை பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது வருகிறது.
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் வரும் நிலையில், வைகை அணை, அமராவதி அணை, முல்லை பெரியாறு அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்ட அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்காசி , தூத்துக்குடி , திருநெல்வேலி , கன்னியாகுமாரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி , தூத்துக்குடி , திருநெல்வேலி , கன்னியாகுமாரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் தமிழ்நாட்டிற்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.