இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறதாம்.. காரணம் என்ன தெரியுமா? – ஆய்வறிக்கை பகீர் தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பிறப்பு அடிப்படையிலான உத்தேச ஆயுட் காலத்தில் இரு ஆண்டுகள் குறைந்துவிடுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஐஐபிஎஸ் எனப்படும் மக்கள்தொகை ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் பேராசிரியர் சூர்யகாந்த் இந்தியர்களின் ஆயுட்காலம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில்,  குழந்தை பிறப்பு மற்றும் மக்களின் இறப்பு விகிதம் நிலையாக இருப்பதை வைத்து பிறந்த குழந்தையின் சராசரி ஆயுட்காலம் கணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் வழக்கத்தை காட்டிலும் 35 முதல் 79 வயதுக்குள்பட்டோர் வரை அதிகளவில் இறந்துள்ளனர்.

இதனால் பிறப்பு, இறப்பு விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் 2020ஆம் ஆண்டு ஆண்களின் உத்தேச ஆயுட்காலமாக 72 ஆண்டுகள் என்று இருந்தது. ஆனால் தற்போது 69.5 ஆண்டுகளாக குறைந்துள்ளது. அது போல் பெண்களுக்கு 69.8 ஆண்டுகளிலிருந்து 67 ஆண்டுகளாக குறைந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts