தமிழ் சினிமாவின் அசத்தல் நடிகரான அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’. அஜித்தின் ஆக்சன் அதிரடியில் உருவாகியுள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார்.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வலிமை ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பை கடந்த சில மாதங்களுக்கு முடித்த அஜித், தற்போது இருசக்கரவாகனம் மூலம் இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். சமீபத்தில் கூட இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியாக வாகா பகுதிக்கு நடிகர் அஜித் சென்றிருக்கிறார். அங்கு தேசியக்கொடியை ஏந்திய அவர், ராணுவ வீரர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வைரலானது.
இந்நிலையில் நடிகர் அஜித் பாலைவனம் ஒன்றில் அமர்ந்து தண்ணீர் குடிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் ரொம்பவே களைப்பாக இருக்கிறார். சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.