கேரளாவில் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் கார் ஒட்டி ரீல்ஸ் எடுக்க முயன்றபோது நண்பர் ஓட்டி வந்த கார் மோதியதில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஆல்வின் என்ற 20 வயதான இளைஞர் துடிதுடித்து இறந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சவுதி அரேபியாவில் இருந்து ஆல்வின் சொந்த ஊர் திரும்பிய நிலையில் இச்சோக சம்பவம் நடந்துள்ளது.
ரீலிஸ் மீது அதீத ஆர்வம் கொண்ட ஆல்வின் நிறைய ரீல்ஸ்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார் . இந்நிலையில் நண்பர்களுடன் புது விதமான ரீலிஸ் எடுக்க முயன்ற போது அவரது நண்பரின் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் அவரது பெற்றோர்களை நீங்கா துயரில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய 2 கே காலத்தில் இளசுகள் இன்ஸ்டா போன்ற செயலிகளில் மூழ்கி கிடைக்கும் நிலையில் அதில் வெறும் லைக்குகள் மற்றும் அதிக பார்வைகளுக்காக ஆபத்தை ஏற்படுத்தும் பல செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
இன்ஸ்டா செயலி மூலம் இதுவரை பலர் பணத்தை இழந்து , மானத்தை இழந்து , படிக்கும் வயதில் தப்பான அறிமுகம்களால் சில கசப்பான அனுபவங்களை சந்திக்கும் இளசுகள் ஒரு படி மேலே சென்று உயிரையும் இழந்து வருவது மிகவும் வருந்த வைக்கிறது.