மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டு, கடந்த மார்ச்சில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை குழு சமர்ப்பித்தது .
இந்த மசோதாவுக்கான தீர்மானம் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று இந்த மசோதா மக்களவையில் கடும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப 220 எம்பிக்கள் ஆதரவு – 149 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 369 எம்பிக்கள் பங்கேற்ற நிலையில் கூட்டுக்குழுவுக்கு மசோதாவை அனுப்ப 220 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்ததால் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இனி நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.