பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் (Revenue Department employees strike),
உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முன்வருமாறு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன் தெரிவிதுள்ளார் (Revenue Department employees strike).
இதுகுறித்து முருகையன் மற்றும் பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மத்தியச் செயற்குழுக் கூட்ட முடிவுகளின்படி நாளை (பிப்.27) முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை, 14,000க்கும் மேற்பட்ட அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய் துறை அலுவலகர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று,
சட்டசபை எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிதிருப்பதாவது..,
“தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறையில் பணிப் பாதுகாப்பு, காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி,
14000 ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று முதல் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ள நிலையில்,
பொது நிர்வாகத்தில், குறிப்பாக தேர்தல் சமயத்தில் வருவாய்த்துறையின் பணிகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு,
எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளைப் போலன்றி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முன்வருமாறு,
இந்த திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.