சுங்கச் சாவடிகளில் காத்திருக்கும் இருக்கும் வாகனங்களின் கண்ணாடியைத் துடைப்பது போல் பாஸ்டேக் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து நூதன முறையில் சிறுவன் பணத்தைத் திருடுவதாக வெளியான காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தக் காத்திருக்கும் நேரத்தைத் தவிர்ப்பதற்காக மத்திய அரசு பாஸ்டேக் என்ற நடைமுறையை அறிமுகப்படுத்தியது.இந்த நிலையில் இது குறித்து காணொளி ஒன்று இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காணொளியில், சிக்னல் ஒன்றின் ஓரத்தில் நிற்கும் வாகனத்தின் கண்ணாடியைச் சிறுவன் ஒருவன் துடைக்கிறான். அப்போது, அவன் வாகனத்தின் கண்ணாடியைத் துடைத்தபோது கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்சியை பாஸ்டேக் க்யூ ஆர்க் கோடு அருகே கொண்டு சென்றதும், அந்த ஸ்மார்ட் வாட்ச்சில் சிவப்பு நிற விளக்கு எரிவதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.அப்போது, அவனிடம் அவன் கையில் உள்ள வாட்ச் பற்றிக் கேட்டுள்ளனர்.
இதனை அறிந்த சிறுவன் பதில் கூறாமல் தப்பி ஓடினான்.இதனால் வாகனத்தில் இருந்த நபர் இறங்கி ஓடி அவனைப் பிடிக்க முயற்சித்தும் அவன் தப்பி ஓடினான். இந்த சம்பவம் முழுவதையும் காணொளியாகப் பதிவு செய்த அந்த நபர் சமூக வலைத்தளங்களில் இதை வெளியிட்டு, வாகனம் கண்ணாடியைத் துடைப்பது போல வந்து பாஸ்டேக்கில் இருந்து பணத்தை நூதன முறையில் கொள்ளையடிப்பதாகவும், இரு வாரங்களுக்கு முன்பு இதேபோன்று தங்களுக்கு நேர்ந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும், விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
https://twitter.com/bittu1201/status/1540286677993721857?s=20&t=tJulda8UfEs_h0buA8IwiA
தற்பொழுது இந்த காணொளிசமூகவலைத்தளங்களில்பரவிவைரலாகவருகிறது.இந்த பதிவு குறித்து பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் பாஸ்டேக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாஸ்டேக் பணப்பரிவர்த்தனை அங்கீகரிக்கப்பட்ட கருவியில் நடைபெறும். அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கருவியும் பாஸ்டேக் பணப்பரிவர்த்தனையைச் செய்ய முடியாது. எனவே, பாஸ்டேக் மிகவும் பாதுகாப்பானதே என்று பதில் அளித்துள்ளது.