ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்ற கருத்திற்கு இயக்குனர் ராஜமௌலி “இந்து மதத்திற்கும் இந்து தர்மத்திற்கும்(hindu-dharma) வித்தியாசம் உள்ளது என்று தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பல மொழிகளில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன், “ராஜ ராஜ சோழனை இந்து மன்னன் ஆக்குவது கலை, இலக்கியம் மட்டுமின்றி சினிமாவிலும் நடக்கிறது” என்று பேசியது விவாதப் பொருளாக மாறியது.மேலும் இது திரைத்துறையினர் ,அரசியல் வட்டாரங்கள் மட்டும்மின்றி நாடு முழுவதும் பேச்சு பொருளாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ராஜமௌலி, இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் உள்ள வேறுபாடு குறித்து பேசினார். விழாவில் பேசிய அவர், RRR படத்தில் இந்து மதத்தை சித்தரிப்பது குறித்தும் பேசினார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய அவர், RRR படத்தில் இந்து மதத்தை சித்தரிப்பது குறித்து பேசினார்.
இந்து மதத்திற்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள வித்தியாசம் பற்றியும் பேசினார்.அவர் இயக்கிய RRR படம் இந்து மதம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. ராஜி என்ற கதாபாத்திரம் துறவியாக மாறும் ஒரு காட்சியை ராஜமௌலி நினைவு கூர்ந்தார்.
அந்தக் காட்சியில் அர்ஜுனனுக்கு ராஜு கிருஷ்ணா உபதேசித்த சமஸ்கிருத மந்திரம் இந்து மதத்துடன் தொடர்புடையது. நம் செயல்களின் முடிவை எதிர்நோக்காமல் வாழ்க்கையை எப்படிப் பார்ப்பது என்று அந்த மந்திரம் சொல்கிறது. இது எந்த ஜாதி, மதத்தைப் பொருட்படுத்தாமல் பொதுவான கருத்து.
இதைத்தான் இந்து மதம் போதிக்கிறது. எனவே, நான் இந்து தர்மத்தைப் பின்பற்றுபவன். நீங்கள் மதத்தை எடுத்துக் கொண்டால் நான் இந்து அல்ல, ஆனால் நீங்கள் தர்மத்தை எடுத்துக் கொண்டால் நான் இந்து என்று தெரிவித்துள்ளார்.