ஆப்கனிஸ்தானின் தாலிபான் அமைப்பையும், சிரியாவில் தற்போது ஆட்சியை பிடித்துள்ள HTS அமைப்பையும் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கனிஸ்தானின் தாலிபான் அமைப்பை நீதிமன்ற உத்தரவு மூலம் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க வழிவகை செய்யும் வகையில் புதிய சட்ட மசோதாவை ரஷ்ய நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
Also Read : இந்திய அணியின் லெஜெண்டாக நினைவு கூறப்படுவீர்கள் – அஷ்வினுக்கு விராட் கோலி புகழாரம்..!!
இதேபோல் சிரியாவில் தற்போது ஆட்சியை பிடித்துள்ள HTS அமைப்பையும் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க ரஷ்யா முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் ரஷ்யாவின் இந்த முடிவுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தும் சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறது.
இந்நிலையில் இந்த முடிவு மிக உயர்ந்த மட்டத்தில் எடுக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் தேவை எனவும் பல கட்ட ஆலோசனைக்கு பின்னரே தாலிபான் மற்றும் HTS அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.