நிலவை ஆய்வு செய்ய ரஷியா அனுப்பிய லூனா – 25 விண்கலம் நிலவில் மோதி தோல்வி அடைந்தது.
கடந்த 10ம் தேதி ரஷியா நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதன் பின்னர், கடந்த 17ம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷிய விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. இதனால், தொடர்ந்து படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன.
நாளை லூனா – 25 விண்கலமானது நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்த நிலையில், திட்டமிட்டபடி நிலவில் இந்த விண்கலத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதாவது, லூனா – 25 விண்கலத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக ரஷிய விண்வெளி நிறுவனம் கூறியது.
அதையடுத்து, நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா -25 விண்கலம் நிலவில் மோதியது.
மீண்டும் லூனா 25-ன் விண்கலத்துடன் தொடர்பை ஏற்படுத்த ரஷிய விஞ்ஞானிகள் முயற்சித்தும் இந்த திட்டம் தோல்வி அடைந்தது.
மேலும், நேற்றைய தினம் லூனா 25-ன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விண்கலம் நிலவில் மோதியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.