தியாக திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நிலையில் மதுரை தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர்பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். அத்துடன் சிலர் ஏழை-எளிய மக்களுக்கு உணவு உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.இது குறித்து இஸ்லாமியர்கள் கூறியதாவது:-
ஆரோக்கியமாக வாழ வழிபாடு சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக பக்ரீத் பண்டிகை பிறை பார்த்து கொண்டாடப்படும். நாங்கள் உலகத்தில் எந்த இடத்திலும் பிறை தெரிந்தால் அந்த நாளில் கொண்டாடுவோம். அதன்படி நேற்று பிறை தெரிந்ததால் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி உள்ளோம் என்று கூறினார்.