இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி அதில் இருந்து எடுக்கப்படும் உப்பே இந்துப்பு என்று சொல்லப்படுகிறது. இந்த உப்பு ஹிந்துஸ்தான் உப்பு என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ராக் சால்ட் என்றும் பாறைகளில் இருந்து எடுக்கப்படுவதால் பாறை உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகையான உப்பு இந்தியாவின் பஞ்சாப் மற்றும் இமையமலை அடிவாரத்தில் இருந்து தான் அதிகளவில் கிடைக்கிறது.
மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்துப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்கள் காணப்படுவதோடு சோடியம் குளோரைடும் அதிகளவில் கணப்படுகிறது
மருத்துவ குணங்கள் நிறைந்த இந்துப்பு
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதுடன் குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவுகின்றது. உடல் வயதடையும் தன்மையை மாற்றி செல்களை புதுப்பித்து சருமத்தை பொலிவுடன் வைத்திருக்கவும், எலும்புகளை வலுவாக்குவதோடு உடலை வலிகள் இல்லாமல் புத்துணர்வோடு வைத்துக் கொள்ளவும் உதவுகின்றது.
இந்துதுப்பை இளஞ்சூடான வெந்நீரில் கலந்து வாய் கொப்புளித்தால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல்வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான பிரச்ச்சனையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் தைராய்டு பிரச்சனைக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது;
அதே சமயம் இந்துப்பு பயன்படுத்துவதினால் என்ன தீமைகள் ஏற்படும் என்று எல்லோருடைய மனதிலும் ஒரு கேள்வி நிச்சயமாக இருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று ஒரு பழமொழி உண்டு.உப்பு கூட அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான்.
உப்பை அதிகமாக பயன்படுத்தினால் உயர்ரத்த அழுத்தம் அதிகமாகும். இதன் காரணமாக உடல் வீக்கம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். மேலும்
மாரடைப்பு, பக்கவாதம், இருதய சுவரில் வீக்கம், சிறுநீரக கோளாறு போன்ற நோய்களும் ஏற்படும். அத்தோடு வறட்சி, முடி உதிர்தல், சருமத்தில் சுருக்கம், நாவறட்சி போன்றவை ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் இந்துப்பின் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.
பர்கர், சீஸ், சிப்ஸ் பீட்ஸா போன்ற துரித உணவுகளை அதிகமாக பயன் படுத்துவதினால் உடலின் உப்பின் அளவு அதிகரிக்கிறது. எனவே இது போன்ற உணவுகளில் உள்ள உப்பின் அளவை கவனத்தில் கொள்ளுவதால் அதிக அளவான உப்பினால் உடலில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துகொள்ளலாம். எனவே உப்பை அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.