இந்திய , தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. மழை பெய்ததன் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும் குவித்தனர்.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய தாகூர் 8 ஓவரில் 39 ரன்கள் குடுத்து 2 விக்கெட்டை சாய்த்தார். குல்தீப் யாதவ் 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அணியின் தவான் 4 ரன்னிலும், கில் 3 ரன்னிலும் வெளியேறினர்.
பின்பு களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 37 பந்துகளில் அரை சதம் கடந்து அவுட் ஆனார். பினார் சாம்சனுடன் ஜோடி சேர்ந்த தாகூர் இணை அணிக்கு தேவையான ஸ்கோரை சீரான இடைவெளியில் சேர்த்தனர். தாகூர் 33 ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டம் கைமாறியது.
இறுதி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில் சஞ்சு சாம்சன் அதிரடியால் 20 ரன்கள் சேர்ந்தது. எனினும் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்ததால் அணி தோல்வியை தழுவியது. 20 ஓவர் முடிவில் 240 ரன்கள் சேர்த்தது இந்திய அணி . இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.