தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு(Murugan )பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. முருகப்பெருமானின்(Murugan) அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.
1முறை சொன்னால் போதும் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். அல்லல் தரும் தொல்லைகள் யாவும் நீங்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவி உறவு சிறக்கும். வேலை, திருமணம், குழந்தைப் பேறு, மற்றும் சகல பாக்கியங்களும் கிட்டும்.
(Murugan mantra)முருகன் துதி…
முத்துக் குமரனே முத்தமிழ் வேலனே!
சித்தனாய் வந்தருளும் சத்திய சீலனே!
வேடர்குலம் உய்ய வந்திட்ட நாதனே!
வள்ளிக்கரம் பிடித்த தணிகா சலனே!
குறிஞ்சித் தலைவனே!தேவ சேனாதி பதியே!
முருகா வெனஅழைக்க ஓடோடி வருபவனே!
வித்தாகி சத்தாகி வந்துதித்த சிவபாலனே!
நித்தமும் தொழுதோம் காத்திடுகதிர் வேலனே!
சூரனொடு போர்புரிந்த சூராதி சூரனே!
அசுரர்படை நடுங்கவந்த வீராதி வீரனே!
கதிர்காமத் துறைகின்ற கதிர் வேலவனே!
வருவாய் அருள்வாய் சண்முகத் தெய்வமே!