தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ATM திருட்டு என்பது தொடர்ந்து அத்கரித்து வருகிறது. ஆன்லைன் மூலம் திருடுவது, வங்கியிலிருந்து பேசுவது போல் போன் கால் செய்து ATM கார்டில் உள்ள எண்களை கேட்டு அதன் மூலம் திருடுவது என டெக்னாலஜி திருட்டாக உருவெடுத்துள்ளது.
இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், எஸ்பிஐ வங்கி புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது ATM-ல் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பவர்கள், பதிவு செய்த தொலைபேசிக்கு வரும் ஓடிபி எண்ணையும் பதிவிட வேண்டும். இந்த சேவை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் எஸ்பிஐ வங்கி அமலுக்கு கொண்டு வந்துள்ளது