Site icon ITamilTv

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இந்த தேர்வுகள் கிடையாது..! – அமைச்சர் அதிரடி..!

Spread the love

தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்பொழுது பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள், தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில், பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படாமல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக ஆடல், பாடல் மற்றும் ஓவியம் போன்றவற்றை கற்றுக்கொடுத்து மாணவர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதற்காக அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டும் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளது. மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.


Spread the love
Exit mobile version