கொட்டித்தீர்க்கும் கனமழை – இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னை உட்பட அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் நகர்ப்பகுதிகள் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

இந்த நிலையில், பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, நாமக்கல், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், நாகை, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, சேலம், திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Related Posts