கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அடுத்தடுத்து தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பல ஊர்களில் சாலைகளிலும் மழைநீர் தேங்கியதோடு சில வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது.
இதன் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், இன்று தூத்துக்குடியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவித்துள்ளதாகவும், அதனால், தேவையில்லாமல் மாணவர்கள் வெளியே சுற்றாமல், தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.