அதிமுக-வின் தற்காலிக அவைத்தலைவர் நியமனம்..!

அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உள்கட்சி விவகாரம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே, அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் என அ.தி.மு.க. தெரிவித்திருந்தது.

அதன்படி இன்று காலை செயற்குழு கூட்டம் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அ.தி.மு.க.-வின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

 

Total
0
Shares
Related Posts