சிவகங்கை அருகே பள்ளி வளாகத்தில் டிபன் பாக்ஸ் வெடித்து சிதறியதில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழக்குளம் கிராமத்தில் பள்ளி வளாகத்தில் டிபன் பாக்ஸ் வெடித்ததில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாழடைந்த பள்ளி கட்டிடத்தில், கீழக்குளம் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கிடந்த டிபன் பாக்ஸை எடுத்து திறக்க முயன்றுள்ளனர்.
முடியாத காரணத்தால் டிபன் பாக்ஸை வீசி எறிந்து உடைத்துள்ளனர். அப்போது அதி பயங்கர சத்ததுடன் டிபன் பாக்ஸ் வெடித்து சிதறியது. இதில் படுகாயம் அடைந்த ராம்கிஷோர், நவீன்குமார், வைணவன் ஆகிய 3 சிறுவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பள்ளி வளாகத்திற்குள் டிபன் பாக்ஸில் வெடிபொருள் வந்தது எப்படி என, சம்பவ இடத்தில் கிடந்த தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.