நடிகை விஜயலக்ஷ்மி அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகும் படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலக்ஷ்மி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பரப்பரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில்,சீமான் தன்னை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும்,6 முறை தன்னை வற்புறுத்தி கரு கலைப்பு செய்ததாகவும், சீமான் தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதாக அடுக்ககடுக்கான புகார்களை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் மீண்டும் விஷ்வரூபம் எடுத்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி, சீமான் மீது நடிகை விஜயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் தலைமையில் விசாரணைக்கு வந்தது.கிட்டதட்ட 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
முன்னதாக 7 முறை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாக குறிப்பிட்டிருந்த நிலையில் மதுரவாயல் போலீசார் விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும் திருவள்ளூரில் உள்ள மகிளா நீதிமன்றத்திலும் விஜயலட்சுமியின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.