தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் தனுஷ் 51 படத்தில் நடிகர் நாகார்ஜூனா, நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் தனக்கென மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் தனுஷ். நடிகர், தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தை நடித்து முடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க திட்டமிட்டு உள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தனது 51வது படத்தில் (D-51) , தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் நடிகர் தனுஷ் கைகோர்க்க உள்ளார்.
இந்த படத்தில் நடிகர் நாகார்ஜூனா தனுஷ் உடன் இணைந்து நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் முதல் முறையாக நடிகர் தனுஷ் உடன் நாகார்ஜுனா இணைந்து நடிக்கவுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகர் நாகார்ஜுனா, நடிகர் மட்டுமன்றி, திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தொழில் அதிபர் என தனது ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறார்.