Self-igniting motor vehicles : தானாக தீ பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள். வாகன உரிமையாளர்களுக்கு சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
இதையும் படிங்க : என் கணவரை ஒருமுறையாவது நேரில் பார்க்கனும்.. கடைசி வரை நிறைவேறாத மனைவியின் ஆசை!
“சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன (Self-igniting motor vehicles).

அவ்விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் மாறுதல் செய்யப்படுகையில் அங்கீகரிக்கப்படாத சி. என். ஜி , எல் .பி .ஜி (CNG/LPG ) மாற்றங்கள், அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்ட, வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகின்றன.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்டம் (மற்றும்) விதிகளின்படி குற்றமாகும் எனவே வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.