தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் வருவதை முன்னிட்டு அதிமுக கட்சியினரிடையே கலகத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ குறித்து மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்தார்.
சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவில் உள்ள குரல் தனது குரல் இல்லை எனவும், தனக்கும், அந்த ஆடியோவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.
மேலும் அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், அதிமுகவின் வளர்ச்சி பிடிக்காத சில சமூக விரோதிகளால் இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த செல்லூர் ராஜு,
இதுகுறித்து தலைமையில் கலந்தாலோசித்த பிறகு காவல் துறையில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா வருகை குறித்து தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என செல்லூர் ராஜு குறிப்பிட்டார்.