நடப்பாண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக மதுரையை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் செல்வ பிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் இன்றைய தலைமுறைகள் உலகே வியந்து பார்க்கும் வகையில் பல துறைகளில் தங்களது கால்தடத்தை அழுத்தமாக பதித்து வரும் நிலையில் விளையாட்டு துறையிலும் பல சாதனைகளை படைத்து வருகின்றனர் . அதிலும் குறிப்பாக தடகள விளையாட்டில் ஆண்கள் , பெண்கள் என இருவரும் பல சாதனைகளை படைத்து கலக்கி வருகின்றனர் .
அந்தவகையில் மதுரையை சேர்ந்த திருமாறன் என்பவரின் மகன் செல்வ பிரபு திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் தற்போது கியூபா நாட்டை சேர்ந்த யோண்ட்ரிஸ் என்பவரது பயிற்சியின் கீழ், தீவிர பயிற்சி மேற்கொண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்தது வருகிறார்.
கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் அண்மையில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில், மும்முறை நீளம் தாண்டுதல் ஆடவர் பிரிவில் பங்கேற்ற இவர் 16.78 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் வென்று மகத்தான சாதனை படைத்தார்.
இந்நிலையில் ஏசியன் அத்தலட்டிக் அசோஷியன் சார்பில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள போட்டியில் மாபெரும் சாதனை செய்தமைக்காக, நடப்பாண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜீலை 10 ஆம் தேதி பாங்காக்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் செல்வபிரபுவுக்கு விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தாய்நாட்டிற்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்ந்த இந்த இளம் காளைக்கு நாட்டுமக்கள் ,அரசியல் தலைவர்கள் ,திரை பிரபலங்கள் என பலரும் பாராட்டுக்களையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .