தளபதியின் லியோ படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன் என நடிகர் ஷாருக்கான் தனது X தளத்தில் கூறியுள்ளார்.
நடிகர் விஜய், இரண்டாவது முறையாக மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும், லியோ படத்தில் அனுராக் காஷ்யப் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 19 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், லியோ மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் தளபதியின் லியோ படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன் என்றும், ஐ லவ் யூ விஜய் சார் எனவும், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது எக்ஸ்- தளத்தில் பதிவிட்டுள்ளார்.