நெல்லையில், கணவனை இழந்த பெண் ஒருவர் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் (gang raped) செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த 40 வயதுடைய கணவனை இழந்த பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், அவர் நெல்லையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், வண்ணார்பேட்டை சாலை தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆன 44 வயதாகும் முருகன் என்ற நபரோடு அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து. ஆட்டோ டிரைவர் முருகன் சம்பவத்தன்று அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு நெல்லை மாநகர பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, அந்த செங்கல் சூளையில் மறைந்திருந்த டிரைவர் முருகனின் நண்பர்களான வண்ணாரப்பேட்டை சாலை தெருவை சேர்ந்த மணிகண்டன், பேராட்சி, அய்யாசாமி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து தங்களுடைய ஆசைக்கு இணங்குமாறு அந்த பெண்ணை வற்புறுத்தி உள்ளனர்.
ஆனால், அவர்களின் ஆசைக்கு இணங்க மறுத்த அந்த பெண்ணை ஆத்திரமடைந்த நான்கு பேரும் அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். பின்னர், 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் (gang raped) செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இந்நிலையில், மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்த அந்த பெண் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, இது தொடர்பாக சங்கரன்கோவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த பெண் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி தலைமையில் விசாரணை நடத்தி முருகன் உள்பட 4 பேர் மீதும் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.