பட்டாசுகளை அனுமதிக்கக் கோரி டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, ஒடிஷா மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை கடிதம் எடுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் தேக்கமடைந்தன.
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளின் விற்பனை செய்யும் முயற்சியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடையை பரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, ஒடிஷா ஆகிய 4 நான்கு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.