21 நாட்களாக வனத்துறையினரின் கண்ணில் மண்ணை தூவி உலா வந்த T23 புலி 2 மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று தீவிர முயற்சிக்கு வனத்துறையினர் பிடித்தனர்.
முதுமலை சாலையில் T23 புலிக்கு மயக்க ஊசி போடப்பட்ட நிலையில், புலி தப்பித்து வனப்பகுதிக்குள் ஓடியதால், இரண்டு கும்கி யானை உதவியுடன் 21 ஆவது நாளாக வனத்துறையினர் தீவிரமாக புலியை தேடி வந்தனர் . பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, வனத்துறையினரும், கால்நடை மருத்துவக்குழுவும் புலியை பிடிக்க தொடர்ந்து போராடி வந்தனர்.
புலி நடமாட்டம் உள்ள அதே பகுதியில் நான்கு இடங்களில் மரத்தின் மீது பரன்களை அமைத்து அதன் மீது கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி துப்பாக்கிகளுடன் கண்காணித்து வந்தனர்.
குறிப்பாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ட்ரோன் கேமராவை கொண்டும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் T-23 புலிக்குக் கடலூர் மசினக்குடி அருகே மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மயக்க ஊசி செலுத்தப்பட்ட புலியை உயிருடன் பிடிக்கும் பணி தீவிரமாக வந்த நிலையில், நள்ளிரவில் மசினகுடி – முதுமலை சாலையில் அந்த புலி சென்று கொண்டிருந்த போது கால்நடை மருத்துவக் குழு 4 முறை மயக்க ஊசியைச் செலுத்தியது.
அதில், இரண்டு ஊசிகள் T23 புலியின் உடம்பில் ஏறியது. இருந்தபோதிலும் புலி வனப்பகுதிக்குள் ஓடியது. இதனால், புலியைப் பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் தீவிரமாக ஈடுபட்டனர்.
தொடர்ந்து 21 நாட்களாக புலியை தேடும் பணி தொடர்ந்து வந்த நிலையில் புலியை வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பிடிபட்ட T23 புலியை சென்னை வண்டலூரில் உள்ள உயிரியியல் பூங்காவில் விடுவதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.