உலகமெங்குமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் எம்.ஜி. ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது.
அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் ‘ நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.