சிவாஜி கணேசனின் குடும்ப சொத்துக்களை தங்களுக்கு தெரியாமல் உயில் தயாரித்து நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஏமாற்றி சொத்துக்களை விற்றுவிட்டதாக பிரபுவின் சகோதரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகில் நீங்கா இடம் பிடித்தவர். நடிகர் திலகம் என பெயர் பெற்ற சிவாஜி கணேசன் ஏறத்தாழ 250 தமிழ் திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார். சிவாஜி கணேசன் 2001 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மகன்கள் ராம்குமார், பிரபு. பிரபுவும் தமிழ் சினிமாவில் தனது நடிப்புத் திறனின் மூலம் பிரபலமடைந்து கோலோச்சியவர். தற்போது அவர் மீது சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சொத்துக்களை அபகரித்து விட்டதாக பரபரப்பு வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் பிரபுவின் சகோதரிகள் குறிப்பிட்டுள்ளாதவது; ”நடிகர் சிவாஜி கணேசனின் குடும்ப சொத்துக்கள் தொடர்பாக போலி உயில் தயாரித்து பிரபு, ராம்குமார் ஏமாற்றுகின்றனர். சில சொத்துக்களை எங்களுக்கு தெரியாமல் விற்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.மேலும் எங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டு தரவேண்டும்’ எனவும் சிவாஜி கணேசனின் மகன்கள் பிரபு, ராம்குமாருக்கு எதிராக அவர்களது சகோதரிகள் சாந்தி, ராஜ்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.