நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன் நடிப்பில் ‘டாக்டர்’ படம் தயாராகியுள்ளது. வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியதை தொடர்ந்து Soul of Doctor தீம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் மிகவும் பிரபலமான செல்லம்மா பாட்டின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
டாக்டர் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு குழுவினர் அறிவித்துள்ளது.