அதிமுக மீதான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு அண்ணாமலை தனது தலைவர் பதவியை கவனிக்க வேண்டும் ( sp velumani pressmeet ) என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது :
அதிமுகவிற்கு வாக்களித்த மக்களிக்கு நன்றி;
வாக்களித்த மக்களை எப்போதும் மதிக்கக்கூடிய கட்சி அதிமுக;
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையால் தான் அதிமுக – பாஜக இடைடேயான கூட்டணியில் பிளவு
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் , அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி குறித்து குறைகூறி பேசியவர் அண்ணாமலை
கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கும். விலகினால் அவ்வளவுதான்
அதிமுக மீதான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு அண்ணாமலை தனது தலைவர் பதவியை கவனிக்க வேண்டும்
கடந்த தேர்தலைவிட அதிமுக கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது
சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகளைவிட அண்ணாமலை தற்போது குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளார்
பாஜக கூட்டணியைவிட அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது 2026 சட்டமன்ற தேர்தலில் ( sp velumani pressmeet ) மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.