தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் தினமும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்து தங்களது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வந்தனர் .
இந்நிலையில் சட்டப்பேரவையின் 4ம் நாளான இன்றும் (ஜூன் 26) அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர் . இதையடுத்து சட்டப்பேரவை தொடங்கியதும், கேள்வி நேரத்தை நடத்த பேரவைத் தலைவர் அப்பாவு முயன்றபோது . அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வழக்கம் போல் கோஷங்களை எழுப்பியதால் பேரவையில் சற்று சலசலப்பு நிலவியது.
இதையடுத்து பேரவை விதிகளின்படி நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார் .
Also Read : இணையத்தை பற்றவைத்த கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ பட டிரெய்லர்..!!
இந்நிலையில் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
விதி எண் 56ன் படி அவையை ஒத்திவைத்து விவாதிக்க தீர்மானம் கொடுத்தோம். விதியின் படி அதிமுக நடந்து கொண்டால் விவாதிக்கலாம் என்று சபாநாயகர் சொன்னார் ஆனால் இன்று விதிப்படி சபாநாயகர் நடக்கவில்லை.
சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். கள்ளக்குறிச்சி பிரச்சனையின் ஆழத்தை கருதி விவாதிக்க அனுமதி கொடுத்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி பிரச்சனையை விட மிக்கியமான பிரச்சனை வேற என்ன இருக்கிறது ? என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் .