திருவண்ணாமலை மகா தீபத்தை காண வரும் குழந்தைகளை பாதுகாக்க காவல்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி , வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர் .
அதிலும் குறிப்பாக கார்த்திகை மாதத்தில் தீப விழா வெகு விமர்சையாக நடைபெறும் . இந்த மாதத்தில் மட்டும் பலலட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து தரிசனம் செய்வர்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதல் குவிந்துள்ளனர்.
Also Read : சாலை விபத்துகளில் தமிழகம் 2ஆவது இடம்..!!
இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புக்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் கமாண்டர் தீபக் தலைமையிலான 30 பேர் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளனர். இதில் இரண்டு பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
இதுமட்டுமின்றி மகா தீபத்தை காண பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் கூட்டத்தில் காணாமல் போவதை தவிர்க்க அவர்கள் கையில், பெயர், பெற்றோர் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டேக் கட்டப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் குழந்தைகள் காணமால் போவதை தடுக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மகா தீபத்தை முன்னிட்டு பல லட்சம் மக்கள் வருகை தருவார்கள் என்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.