உடலுறவில் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்க இருக்க சில வித்தைகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக கணவன், மனைவி உறவில் தாம்பத்யம் மிகவும் முக்கியமான ஒரு விஷயம். சில பெண்கள் தாம்பத்ய சுகத்தை முழுமையாக அனுபவிக்காமல் இருப்பதற்கு அவர்கள் கணவர்களின் அவசர குணம் தான் காரணமாக இருக்கிறது என கூறுகின்றனர்.
பெண்களும் கூச்சம் காரணமாக அதை தனது துணையிடம் வெளிப்படையாக கூறுவதில்லை. மேலும், பல பெண்கள் தாம்பத்ய உறவின் போது உச்சக்கட்டம் அடைவதில்லை. மாறாக, தனது துணையிடம் உச்சம் அடைந்து விட்டதை போல் நடிக்கின்றனர் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், சில ஆண்களுக்கு ஆண் உறுப்பு சிறியதாக இருப்பது குறித்த வருத்தம் இருக்கும். ஆனால், தனது துணையை மகிழ்விப்பதற்கும் ஆணுறுப்பு அளவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். மேலும், தாம்பத்தியத்தை விரல் வித்தைகளில் கூட மகிழ்வாக அனுபவிக்க முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அது பற்றி விரிவாக காணலாம்.
தாம்பத்யத்தின் போது, துணையை திருப்திப்படுத்த, பெண்ணின் வால்வா பகுதியில் இருக்கும் கிளிட்டோரஸ் பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும். தாம்பத்தியத்தின்போது பெண்களின் கிளிட்டோரிசை தொடர்ச்சியாக தொட்டு தூண்டுவது அவசியம். மேலும், அந்த பகுதியில் தொடும்போது பெண்கள் உச்சக்கட்டத்தை அடைகிறார்கள்.
குறிப்பாக, பெண்ணுடலில் ஆண்களின் விரல்கள் வருடுவதன் மூலம் பெண்கள் அதிகம் சிலிர்த்து விடுவார்கள். இப்படி, ஆண்கள் முன்விளையாட்டை செய்வதால் மனைவியுடன் மிகவும் நெருக்கமாக இருக்க முடியும்.
உடலுறவின் போது, ஆண்கள் கை விரல்களை கிளிட்டோரஸ், பெண்ணுறுப்பில் மெதுவாக செலுத்தி பெண்ணை திருப்தியடையச் செய்யலாம். மேலும், ஆண்களின் உறுப்பு மூலம் அளிக்க முடியாத திருப்தியைக் கூட அவர்களின் கைவிரல்கள் கொடுக்கும் என்கின்றனர் ஆலோசகர்கள்.