குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தாவிற்கு திரில் வெற்றியை பெற்று தந்த ரின்கு சிங் ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களின் கவனத்தை தன் வசப்படுத்தி உள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 2023 இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரின்கு சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், கடைசி ஐந்து பந்துகளில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது
ஏற்கனவே அந்த அணி ஏழு விக்கெட்களை இழந்த நிலையில் குஜராத்திற்கான வெற்றி என்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், ஆனால் மைதானத்தில் இருந்த ஒரு இளைஞர் மட்டும் வெற்றி இன்னும் வெற்றி கையை விட்டு செல்லவில்லை என்று மன உறுதியுடன் இருந்தார்.
ஆட்டத்தின் ஒரு கட்டத்தில், ரிங்கு 14 பந்துகளில் 9 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். 19வது ஓவரின் 5வது பந்தில் இருந்து பேட்டிங்கின் தொடங்கியது.அவர் ஜோசுவா லிட்டில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரிக்கு கடைசி இரண்டு பந்துகளில் விளாசினார். கடைசி ஓவரில் வெற்றி பெற 29 ரன்கள் இருந்த நிலையில், மற்றொரு ஆட்டகரான உமேஷ் யாதவ் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார். ரிங்குவின் சரமாரியான சிக்ஸர்கள் இரண்டாவது பந்து வீச்சை ஒரு பெரிய சிக்ஸருக்கு அடிக்கத் தொடங்கினார்.
பின்னர் கடைசி ஐந்து பந்துகளில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டபோது அவர் அடுத்தடுத்து ஐந்து சிக்ஸர்களை அடித்தார். அஹமதாபாத்தில் நடப்பு சாம்பியனுக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நம்பமுடியாத மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து ஒட்டுமொத்த கொல்கத்தா அணிக்கும் மற்றும் அவர்களின் ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் செய்தார்.
யார் இந்த ரிங்கு சிங் ?
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் எலிவாய்வு சிலிண்டர் வினியோகம் செய்த கன்சந்திரா சிங்கின் மூன்றாவது மகன் தான் இந்த ரிங்கு சிங்.
ஒரு சிறிய வீட்டில் தனது குழந்தை பருவத்தை கழித்த ரிங்கு சிங் கிரிக்கெட்டை தனது வாழ்க்கையாக மாற்றிக் கொள்வதற்கு முன்பு தனது குடும்பத்தில் பொருளாதரத்தை சரிசெய்ய தூய்மை பணியாளர் பணிக்காக ஈடுபட்டு கொண்டிருந்தார்.
ஆனால் கிரிக்கெட்டின் மீது இருந்த ஆர்வத்தால் அவரை முழுமையாக கிரிக்கெட்டில் கவனம் செலுத்தத் தூண்டியது. கடந்த 2016 ஆம் ஆண்டு 16 வயதில் உத்தரபிரதேசத்திற்காக லிஸ்ட் கிரிக்கெட்டில் ரிங்கு சிங் அறிமுகமானார். அந்த போட்டியில் அதிகபட்ச ரன்கள் எடுத்தது ரிங்கு சிங் தான்.
அதே ஆண்டில் ராஞ்சி டிராபி மூலம் உத்தரப்பிரதேச அணிக்காக தனது முதல்தர கிரிக்கெட்லும் கால் தடம் பதித்தார் என்பது குறிப்பிடதக்கது.