இந்தியாவில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் செளமியா சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. மேலும் இந்த வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாற்றம் அடைந்து உலக நாடுகளை அச்சத்தி ஆழ்த்தியது. இதனை அடுத்து பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக கொரோன வைரஸ் குறைவடைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் உலக முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை மிக மோசமாக வீச தொடங்கி உள்ளது.
இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியிருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.