ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கான போட்டியில் ஐதாராபாத் அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக எவின் லெவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். லெவிஸ் 6 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க, கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுடன் இணைந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடியா ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 164 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர்-க்கு பதிலாக ஜோசன் ராய் சேர்க்கப்பட்டு தொடக்க வீரராக களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய அவர் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி கிடைத்த பந்துகளை பவுண்ட்ரி எல்லைக்கு விரட்டினார்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றது.. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 8ஆவது உள்ளது. இதன் மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நுழையில் தக்கவைத்துள்ளது.